பாரதிராஜாவின் முதல் பலமே இளையராஜாதான் வைரமுத்துவே சொல்லிட்டாரே...

 
ilayaraja

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் வெற்றிடத்தை இனிமேல் யாராலும் நிரப்ப முடியாது என்ற அசைக்க முடியாத தன்னுடைய சாம்ராஜ்யத்தை விட்டு சென்றிருக்கிறார் இயக்குனர் இமயம்.  பாரதிராஜா கடந்த ஜூன் 10ம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மரணம் அடைத்தார்.

அதன் பின்னர் பாரதிராஜாவின் உடன் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழக அரசின் முழு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. பாரதிராஜாவின் திறமை குறித்தும் அவரது திரைப்பட நுணுக்கங்களை குறித்தும் அவருடன் பணியாற்றிய பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள் .

ilayaraja bharathiraja

அந்த வகையில் வைரமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாரதிராஜாவின் முதல் பலமே இசைஞானி இளையராஜா தான் . அவரது இரண்டாம் பலம் நல்ல கதை ஆசிரியர்கள்.... கலைமணி, ஆர் செல்வராஜ் ,கே பாக்யராஜ், மணிவண்ணன், கண்ணன் ,ரத்னகுமார் போன்ற கதை ஆசிரியர்கள் பாரதிராஜா என்ற சிற்பி செதுக்குவதற்கு விளைந்த கருங்கற்களை  கண்டெடுத்தார்கள் .

பாரதிராஜா யார் நல்லது எது சொன்னாலும் ஏற்றுக்கொள்வார். அப்படித்தான் "அலைகள் ஓய்வதில்லை" படத்தின் உச்ச காட்சியில் சிலுவைப், பூணூல் இரண்டையும் அறுத்தெறியுங்கள் என்று சொன்னவர் சித்ரா லட்சுமணன். 

அதையும் ஏற்றுக்கொண்டாரே என்ற வைரமுத்து பாரதிராஜாவின் குணத்தை பாராட்டிப் பேசி இருக்கிறார்.மேலும் இளையராஜா மற்றும் பாரதிராஜா அவர்களுக்கு இடையேயான ஒரு நட்புணர்வு ஆழத்தை வைரமுத்துவின் இந்த பேச்சில் நம்மால் பார்க்க முடிகிறது.

Tags

From Around the web