Categories: Cinema News latest news

புதுமாப்பிள்ளை சினேகனை நேரில் அழைத்து பரிசு கொடுத்த இசைஞானி!

கவிஞர் சினேகனுக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்த இசைஞானி இளையராஜா!

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன் பாண்டவர் பூமி தொடங்கி ஏப்ரல் மாதம், மௌனம் பேசியதே, சாமி , படிக்காதவன் , ஆடுகளம் , வில்லு என ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

snehan

இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். இதையடுத்து தனது நீண்ட நாள் காதலியான கன்னிகா ரவியை ஜூலை 29 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். நடிகர் கமல் ஹாசன் முன்நின்று நடத்தி வைத்த அந்த திருமணத்தில் பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

snehan

இந்நிலையில் இசைஞானி இளையராஜா திருமணத்திற்கு வரமுடியாததால் சினேகன் – கன்னிகா தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்தி தங்க மோதிரம் அணிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சினேகன், ” எங்கள் திருமணத்திற்கு வர இயலாததால் எங்களை நேரில் அழைத்து மோதிரம் அணிவித்து தன் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்த இசைஞானிக்கு நன்றிகள் என கூறியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்