Categories: Cinema News latest news throwback stories

இளையராஜாவையும், தேனிசை தென்றலையும் அலறவிட்ட கார் ஓட்டுநர்.! இருவரும் ஒருவரே.!

ரசிகர் என்பவர் எப்படியாவது தங்கள் அபிமான நட்சத்திரத்தை ஒரு தடவை பார்த்திரமட்டமா? அவரது தரிசனம் ஒரு தடவை கிடைத்துவிடாதா? அவரிடம் பேசி விட மாட்டோமா என ஏங்குவார்கள்.

அப்படி ஒரு தீவிர இசைஞானி இளையராஜா ரசிகர் ஒருவர், தான் கார் ஓட்டினால் அது இளையராஜாவுக்கு தான் என கூறி கடுமையாக வேலை தேடியுள்ளார். ஒரு வழியாக அப்படி வாய்ப்பும் கிடைத்துவிட்டது. ஆனால் ஒரு கண்டிஷனோடு,

அதாவது, காரில் இளையராஜா ஏறும்போது கார் திறந்து மூடும் சத்தம் மட்டும் கேட்கும். திரும்பி பார்க்க கூடாது. பார்த்து பேச முயற்சிக்க கூடாது. அப்படி முயற்சி செய்தால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது கோபப்பட்டுவிடுவார். என கூறிவிட்டனர். அதே போல இளையராஜா வருவார் கார் கதைவை திறப்பார். உள்ளே ஏறிய பின்பு கார் கதவை மூடிவிடுவார் கார் கதவு சத்தங்களை கேட்டு மட்டுமே வண்டி ஒட்டி வந்துள்ளார்.

ஒரு நாள் அப்படி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து கார் கதவை திறந்துள்ளார். அந்த சமயம் எதையோ மறந்து அலுவலகத்தில் வைத்துவிட்டார் போலும். அதனை எடுக்க திரும்ப சென்றவர் கதவை மூடிவிட்டு சென்றுவிட்டார். இந்த ஓட்டுனரும் இளையராஜா வண்டியில் ஏறிவிட்டார் என நினைத்து வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். வீட்டிற்கு சென்று வெகு நேரம் ஆகியும் இளையராஜா இறங்கும் சத்தம் கேட்கவில்லையே என திரும்பி பார்க்கும் போது தான் தெரிகிறது அவர் வண்டியில் ஏறவில்லை என்பது. அந்த வேலை பறிபோனது தான் மிச்சம்.

அடுத்து தேனிசை தென்றல் தேவாவிடம் கார் ஓட்டுனராக சேர்ந்துள்ளார். ஓரு முறை தேவாவை ஏற்றிக்கொண்டு போகையில், யாரோ நமது காரை பின் தொடர்ந்து வருகிறார்கள் என தேவாவை பயமுறுத்திவிட்டார். தேவாவும் இடது பக்கம் செல். வலதுபக்கம் செல் என கூறிபார்த்துள்ளார். அப்போதும் சார் அந்த கார் நமது வண்டி பின்னர் தான் வருகிறது என பயமுறுத்திக்கொண்டே வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வண்டியை நிறுத்து நாம் அந்த கார் காரரிடம் கேட்டுவிடுவோம் என தேவா இறங்கி காரின் பின்னால் பார்த்தல் யாருமே இல்லை.

அப்புறம் தான் தெரிகிறது காரின் பின்புற டிக்கி திறந்துள்ளது அதனை தான் யாரோ பாலோ செய்கிறார் என்று அந்த ஆர்வக்கோளாறு ஓட்டுநர் கூறியது தெரியவந்துள்ளது. பிறகு தேனிசை தென்றலிடம் இருந்தவேலையும் காலி.

Manikandan
Published by
Manikandan