Connect with us
vadivelu

Cinema News

அப்பவே ஆரம்பிக்கப்பட்ட இளையராஜாவின் பயோபிக்! வடிவேலு ஹீரோவா? ஏன் வெளிவரல தெரியுமா?

Ilaiyaraja: தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்கள் அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. இவருடைய இசை தான் இன்று பல பேருக்கு மருந்தாக இருந்து வருகின்றது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடலைக் கேட்டால் போதும் என்ற நிலைமைக்கு இளையராஜா நம்மை கொண்டு சென்று இருக்கிறார்.

அந்த அளவுக்கு அவருடைய இசையில் ஒரு மேஜிக் இருக்கிறது. தாலாட்டு பாடல், கும்மி பாடல், நாட்டுப்புறப் பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என எல்லா விதமான இசையையும் கொடுத்தவர். அத்தனை உணர்வுகளுக்கும் அவருடைய பாடல்கள் ஆறுதலாக அமைந்து வருகின்றன. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே இசையில் உருவாக்கி இருக்கிறார் இளையராஜா.

இதையும் படிங்க: விஜய் அஜித்தை வச்சு ஹிட் கொடுக்கிறது பெருசு இல்ல! இவர வச்சு கொடுக்கனும்.. பேரரசு சொன்ன நடிகர்

இந்த நிலையில் அவருடைய பயோபிக் கூடிய சீக்கிரம் தயாராக இருக்கிறது. இது இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். தற்போது தனுஷ் ராயன் திரைப்படத்திலும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடனும் பணியாற்றிக் கொண்டு இருப்பதால் இந்த படங்களுக்குப் பிறகு இளையராஜாவின் பயோபிக்கில் இணைய இருக்கிறார்.

இதில் இளையராஜாவை பற்றி ஏராளமான விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நாம் அறிய முடியும். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு படத்தில் இளையராஜா நடிக்க இருந்ததாகவும் ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் ஒரு தகவலை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி செய்த சம்பவம்!.. நெகிழ்ந்து போன வைரமுத்து!.. பாசமுள்ள மனிதனப்பான்னு எழுதினது தப்பில்ல!..

அந்த படத்தின் பெயர்  ‘இளையராஜாவின் மோதிரம்’. அதில் நடிக்க இருந்தவர் வடிவேலு. கூடவே இளையராஜாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம் .ஆனால் திடீரென இளையராஜா அந்த படத்தில் இருந்து விலக அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நான் வேண்டுமென்றால் நடிக்கிறேன் என ரஜினி ஆர்வமாக வந்ததாகவும் ஒரு தகவல் வலைதளத்தில் இருப்பதாக சித்ரா லட்சுமணன் கூறினார்.

ஆனால் அந்த படம் அப்படியே நின்றுவிட்டது என்றும் சித்ரா லட்சுமணன் கூறினார். ஒருவேளை படத்தின் தலைப்பை வைத்து பார்க்கும் போது இளையராஜா வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படம் அமைந்திருக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: குழந்தை இல்லாத ஏக்கம்!.. எம்.ஜி.ஆருக்கு இருந்த செண்டிமெண்ட்!.. இப்படி எல்லாம் யோசிப்பாரா!…

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top