Categories: latest news throwback stories

40 ஆண்டுகள் ரகசியத்துக்கு விடை கிடைத்தது… இளையராஜா- வைரமுத்து பிரிவுக்கு காரணமே இதானாம்!

இளையராஜா இசை வெற்றி பெற நான்தான் காரணம்னு கல்லூரி மேடைகளில் வைரமுத்து பேசியுள்ளார். அதனால தான் ரெண்டு பேருக்கும் பிரிவு வந்ததுன்னு கங்கை அமரன் சொல்கிறார். ஆனால் இந்தக் கூற்றில் உண்மை இல்லை. ஏற்கனவே சாதிச்சி முடிச்சவர் இளையராஜா. அவரை என்னால தான் சாதிச்சாருன்னு வைரமுத்து சொல்லவே முடியாது.

இளையராஜா 75ல வந்தார். இன்னைக்கு வரைக்கும் அன்னக்கிளி கொடுத்த பிரேக்கை யாருமே கொடுக்கல. அந்தக் காலத்துல இளையராஜாவின் படத்தைப் போட்டுத்தான் ஆடியோ வெளியாகும். 5வருஷத்துல அவர் சாதிச்சிடுறாரு. அடுத்து வைரமுத்து வர்றாரு. அவரு சாதிச்சிட்டாரான்னா? இது வேற ஒரு வடிவம். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலைச் சொல்லலாம். அவர் வரும்போது ஒரு பாடலை மட்டும் அவருக்குக் கொடுக்கிறார். முதல் பாடலே இளையராஜா முடிஞ்சா எழுதிப்பாருங்கற ரகத்துல தான் டியூன் கொடுக்கிறார்.

ஒரு சொல்லையே வைரமுத்து பிரித்து விடுகிறார். அதாவது பொன் மா லைப் பொழுது… அடடா விவரமான ஆளா தான் இருப்பாருன்னு நினைக்கிறாரு இளையராஜா. அதனால மொத்தமா ஒரு படத்துல உள்ள அத்தனைப் பாடலையும் அவருக்கிட்டேயே கொடுக்கிறாரு. வைரமுத்து வந்தபிறகு கங்கை அமரனுக்கு என்ன ஆகிறதுன்னா நாம இருந்த இடம் குறையுதோன்னு ஒரு ஃபீல் வருது. தனக்கான வாய்ப்புகள் அதாவது பாடல் எழுதுற வாய்ப்பு பறிபோகிறதோ என வருத்தம் வருகிறது.

கீதாஞ்சலி படத்தில் வரும் ‘ஒரு ஜீவன் அழைத்தது’ பாடலுக்கான வாய்ப்பை எனக்குக் கொடுன்னு கங்கை அமரன் கேட்கிறார். இந்த மெட்டுக்கெல்லாம் உன்னால பாட்டு எழுத முடியுமா? உனக்கெல்லாம் வருமான்னு கிண்டல் பண்ண கங்கை அமரனுக்குக் கோபம் வருகிறது. அதை மனதுக்குள்ளேயே வைத்து விடுகிறார். என்னை இப்படியா பண்றீங்கன்னு மனசுல நினைக்கிறாரு. வைரமுத்துவைப் பற்றிச் சொல்ல சொல்ல இளையராஜா அவருக்கான பாடலைக் குறைக்கிறாரு.

Gangai amaran

மாவீரன் படத்துல வாங்கடா வாங்க பாடலுக்கு வைரமுத்து வரிகள் எழுதப் போகிறார். அப்போது அந்த மெட்டுல ஒரு சின்ன திருத்தம் இருக்குன்னு திரும்ப வாங்கிடறாங்க. திருந்திய பிறகு கவிஞர் பக்கம் வரவில்லை அந்தப் பாடல். அது கங்கை அமரனுக்குப் போகிறது. இதுமாதிரியான சின்ன சின்ன சங்கடங்கள் வருகிறது. அதன்பிறகு ஒரு கட்டத்துல இருவரும் சேரவே இல்லை.

86க்குப் பிறகு 40 ஆண்டுகள் ஆகிறது. ஒருவேளை 2 பேரும் சேர்ந்து இருந்தால் இன்னும் பல நல்ல பாடல்கள் கிடைத்து இருக்கும். இந்தப் பிரிவுக்கு கங்கை அமரனின் கோபம்தான் காரணம். இதுதான் யதார்த்தம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v