Categories: Cinema News latest news

ஹார்மோனியத்தை இனிமே தொடமாட்டேன்.. ரஜினியிடம் சவால் விட்ட இளையராஜா – அப்புறம் என்னாச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி. சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து அதன் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இளையராஜாவின் தம்பியும் பிரபல பாடகர் தயாரிப்பாளர் இயக்குனருமான கங்கை அமரன் பிரபு, ராமராஜ் ஆகியவர்களை வைத்து பல படங்களை எடுத்திருக்கிறார்.

செந்தூரப்பூவே என்ற பாடலை எழுதியதன் மூலம் சினிமாவில் யார் இவர் என்ற ஒரு தேடலை உருவாக்கினார் கங்கை அமரன். அந்த அளவுக்கு பூக்களின் பெயர்களை வைத்தே நிறைய பாடல்களை எழுதி இருக்கிறார்.

தயாரிப்பாளராக இயக்குனராக இசையமைப்பாளராக வளம் வந்த கங்கை அமரன் ரஜினியை வைத்து மட்டும் படம் எடுக்கவே இல்லையாம். அதற்கான காரணத்தை கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ராஜாதி ராஜா திரைப்படத்தை இளையராஜாவின் கம்பெனி மூலமாக தான் தயாரித்திருந்தார்கள்.

அந்தப் படத்தை ஆர் சுந்தர்ராஜன் இயக்க இளையராஜா இசை அமைத்திருந்தார். அப்போது ரஜினி இளையராஜாவிடம் இந்த படத்தை கங்கை அமரனை வைத்து எடுத்திருக்கலாமே. நல்ல காமெடி சென்ஸ் உள்ளவர் என கேட்டாராம்.

அதற்கு இளையராஜா இந்தப் படம் மட்டும் ஓடவில்லை என்றால் இனிமேல் இந்த ஹார்மோனியத்தை நான் தொடவே மாட்டேன் என சவால் விட்டாராம். ஆனால் ராஜாதி ராஜா படம் வெளியாகி சூப்பர் சூப்பர் வெற்றி பெற்ற படமாக அமைந்தது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini