இசைப்பேரரசி ஜானகியின் மறைவு..! கேள்விப்பட்டதும் இளையராஜா சொன்னது இதுதான்..!
தன்னுடைய சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களை தாங்க முடியாத நிகழ்வுகளை தாங்கி, அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். ஜானகி அம்மா, தனது திறமையில் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று இசைஞானி இளையராஜா ஜானகி அம்மாவின் மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் என்னென்ன சொன்னார் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஜானகி அம்மாவின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துக்கம் அடைந்தேன். மிகவும் அதிர்ச்சியான செய்தியாக எனக்கு இருந்தது. தனது சொந்த வாழ்வில் தாங்க முடியாத துக்கங்களைத் தாங்கி வாழ்ந்தார் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். உலக கம்போசர்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துக்கமாக இருந்து இருக்கிறது என்பதுதான் இதுவரை நடந்து இருக்கிறது.
ஆனால், ஜானகி அம்மா தனது திறமையில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. மிகவும் கடினமான உழைப்பாளி. நான் ஒரு பாடலை உருவாக்குவதற்கு ஒவ்வொரு வாத்தியத்துக்கும் மிகவும் அக்கறையுடன் சேர்ந்து அதில் விடாப்பிடியாக நான் நினைப்பதை வரவழைப்பேனோ, அது போல அவருக்கு சொல்லிக் கொடுத்த பாடலையும் அவர் விடாப்பிடியாக எனது கடின உழைப்புக்குச் சமமாக, அதற்கும் மேல் என்றும் சொல்லலாம்.
சிறந்த கம்போசர். சிறந்த பாடல்கள், சிறந்த பஜன் பாடல்களை நிறைய எழுதி இருக்கிறார். அவரது இழப்பு இந்திய திரைப்பட சங்கீத உலகத்திற்கு ஒரு பெரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார் இளையராஜா.
