போற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே? தேவா பொழப்புல மண்ணள்ளி போட்ட இளையராஜா
இசைஞானி: இசைத் துறையில் பல ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளைப் படைத்து ஒரு ஜாம்பவானாக அனைவர் மத்தியில் திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசை பயணத்தில் ஏகப்பட்ட விருதுகள் சாதனைகள் என அனைவரும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறார் இளையராஜா. இவருடைய பாடல்களாலேயே பல திரைப்படங்கள் வெற்றியடைந்து இருக்கின்றன.
சிம்பொனி இசை: தற்போது சிம்பொனி இசையை 35 நாட்களில் உருவாக்கி இருக்கிறார் இளையராஜா. இதுவும் மிகப்பெரிய சாதனை. ஏனெனில் சிம்பொனி இசையை உருவாக்க கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகியிருக்கின்றன. ஆனால் இளையராஜா 305 நாட்களில் அதை செய்து காட்டி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய யூடியூப் சேனலுக்கு இளையராஜா அவருடைய பல அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார் .
கர்வம் இருக்கும்: அதில் இளையராஜாவை பற்றி அனைவரும் முன்வைக்கும் கருத்து என்னவெனில் அவர் மிகவும் திமிர் பிடித்தவர் கர்வம் பிடித்தவர் என்று. அப்படி இருந்தால் என்ன தவறு .நான் தான் கர்வமாக இருக்க வேண்டும். எனக்கு கர்வம் இருக்கிறது. ஏனெனில் அந்த அளவுக்கு நான் சாதனை படைத்திருக்கிறேன் என்று மிகவும் ஓப்பனாக பேசியிருந்தார் இளையராஜா. இந்த நிலையில் தேவாவின் வழியில் இளையராஜா குறுக்கிடுகிறார் என்பது மாதிரி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
காசு சம்பாதிக்க: இப்போது பெரிய பெரிய இசையமைப்பாளர்கள் கச்சேரியை நடத்த பல்வேறு இடங்களுக்கு சென்று தனது இசையில் வந்த பாடல்களை மேடைகளில் பாடி அதன் மூலம் பணமும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த வகையில் இளையராஜாவும் தேவாவும் அதே மாதிரியான வழியை பின்பற்றி வருகின்றனர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் தேவா எந்த ஊர்களுக்கு எல்லாம் சென்று கச்சேரி நடத்துகிறாரோ அதே ஊர்களுக்கு இளையராஜாவும் சென்று வருகிறாராம்.
அது மட்டுமல்ல ஒரே ஊரில் இருவரின் கச்சேரி எனும் போது தேவாவை விட இளையராஜாவுக்கு தான் அதிக வரவேற்பு இருப்பதால் இளையராஜா நடத்தும் கச்சேரிக்கு தான் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன என்பது மாதிரி தகவல் வருகின்றது. இதனால் தேவாவின் இசைக் கச்சேரியில் தொய்வு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல சமீபத்தில் கூட இளையராஜா திருநெல்வேலியில் கச்சேரி நடத்தினார் .
அப்போது தமிழ்நாட்டில் வேறு எந்த ஊர்களுக்கு எல்லாம் செல்ல போகிறேன் என்பதை பற்றியும் அந்த ஊர்களின் பட்டியலை மேடையில் கூறினார் இளையராஜா. அதில் பெரும்பாலான ஊர்களில் தேவாவின் இசை கச்சேரியும் நடக்கப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இளையராஜா வேண்டுமென்றே செய்கிறாரா அல்லது எதேச்சையாக நடக்கும் செயலா என அனைவரும் சந்தேகத்து வருகின்றனர்.