Categories: Cinema News latest news

ரஜினியை பார்க்க வீடு தேடி சென்ற இசைஞானி இளையராஜா.! ஓ இதுதான் விஷயமா.?!

தமிழ் சினிமாவில் ஏன், உலக சினிமாவிலேயே 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் நமது இசைஞானி இளையராஜா. அவரது பாடல்கள்தான் தற்போதும் பலரது ஃபேவரைட் ஆக உள்ளது. அவர் பாடல்களை கேட்காமல் நாம் ஒரு நாளை கடந்து போவது கடினம்.

இவரது பிறந்த நாள் வரும் ஜூன் இரண்டாம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக கோவையில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான ஒத்திகை சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்று இசைஞானி இளையராஜா சந்தித்து பேசி விட்டு வந்துள்ளார். ஒருவேளை பிறந்தநாள் இசை நிகழ்ச்சிக்கு ரஜினியை அழைத்து உள்ளாரா இளையராஜா என்பது தெரியவில்லை.

இதையும் படியுங்களேன் – சின்ன வயசுல செ*ஸ் புக் படிச்சேன் – மிஷ்கின்.! அவுங்க அம்மா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க..,

மேலும், தனது இசை நிகழ்ச்சி ஒத்திகை பார்க்க தனது காரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இளையராஜா அழைத்துச்சென்று, அதன் ஒத்திகையை நேரில் பார்க்க செய்தாராம். அதனை பார்த்த ரஜினிகாந்த் மிகவும் சந்தோஷப்பட்டாராம்.

இணையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இளையராஜாவும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. இளையராஜாவை ரஜினிகாந்த் எப்போதும் ‘சாமி’ என்று தான் அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan