Categories: Cinema News latest news

யுவன் பிறந்த கதை தெரியுமா.?! அழகாய் விவரிக்கும் இளையராஜா.. வைரலாய் பரவும் அந்த வீடியோ…

இளைஞர்கள் மத்தியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இசையமைப்பாளருக்கு முன்னணி நடிகருக்கு இணையான ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றால் அது யுவன் ஷங்கர் ராஜாவாக தான் இருக்கும். அந்தளவுக்கு இவரது இசை ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது.

இவருக்கு இன்று 43வது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் பிறந்த சம்பவத்தை யுவனின் தந்தையும், இசைஞானி ஒரு வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார்.

இதையும் படியுங்களேன்  – அம்மா செண்டிமெண்ட்.. கணக்கு வாத்தி விக்ரம்.. அடுத்தடுத்த கொலைகள்… மிரட்டியதா கோப்ரா.?! முழு விமர்சனம் இதோ…

அதில், குறிப்பிடுகையில் ஆழியாறு  அணை அருகில் ஏதேனும் ஒரு கெஸ்ட் கவுஸில் தான் நான்அப்போது இசையமைத்து வருவேன். அப்படி தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மற்றும் இயக்குனர் மகேந்திரன் உடன் ஜானி படத்திற்கு இசையமைக்க சென்றிருந்தேன்.

இதையும் படியுங்களேன்  – விக்ரம் ரசிகர்களுக்கு இது ஒன்னும் புதுசில்ல… பெரிய எதிர்பார்ப்பு சுமார் வெற்றி… ஷாக்கிங் லிஸ்ட் இதோ…

அப்போது, தயாரிப்பளார் கே.ஆர்.ஜிக்கு கோவையில் வீடு உள்ளது. அங்கு சென்று திரும்பி வருவார். அப்போது தான் எனக்கு யுவன் பிறந்த செய்தியை அவர் கூறிய செய்தியை, கூறினார். அப்போது கூட நான் படத்திற்கு இசையமைத்து கொண்டிருந்தேன் என  யுவன் பிறந்த சமயம் நடந்த கதை கூறி, யுவன் ஹேப்பி பர்த்டே என கூறினார்.

Manikandan
Published by
Manikandan