என்னுடைய பயோபிக் வருமானு தெரியல.. திருவள்ளூவர் பயோபிக்கில் இளையராஜா
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் அனைவரையும் தன் வசப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. இசைஞானமே தெரியாமல் சென்னைக்கு வந்து இன்று பல பேர் அவருடைய இசையை பின்பற்றி தங்களை மெருகேற்றி வருகின்றனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் கேட்கக்கூடிய பாடல்களாக இளையராஜாவின் பாடல்கள் தான் அனைவருக்கும் இருக்கின்றன.
எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் ஏற்ற பாடல்களை இளையராஜா இசையமைத்துள்ளார். ஆரம்பத்தில் கச்சேரிகளில் பாடி வந்த இளையராஜா இன்று ஒரு இசைஞானியாக உலகமே போற்றும் இசை மாமேதையாக உருவெடுத்து இருக்கிறார். இளையராஜா அவருடைய திரை வாழ்க்கை பயணத்தை படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்க அவருடைய பயோபிக் உருவாக போவதாக தகவல்கள் வெளியானது.
அதில் இளையராஜாவாக தனுஷ் நடிப்பதாகவும் அந்த படத்தை அருண்மாதேஸ்வரன் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. அதற்காக இளையராஜாவுடன் அருண் மாதேஸ்வரன் சில நாட்கள் தங்கி இருந்து அவருடைய வாழ்க்கைப் பயணத்தை பற்றி அவர் குறிப்பெடுத்துக் கொண்டார் என்றும் தகவல்கள் வெளியானது .ஆனால் இந்தப் படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.
ஒரு சிலர் இந்த பயோபிக் கைவிடப் போவதாகவும் ஒரு சிலர் இந்த படத்தை தயாரிக்க சில தயாரிப்பு நிறுவனம் முன் வரவில்லை என்று பல தகவல்கள் வெளியாகி கொண்டு வருகின்றன.இந்த நிலையில் உலகமே போற்றும் ஒரு மாமேதையாக இருப்பவர் திருவள்ளுவர். வாழ்க்கைக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் தன்னுடைய குரள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தவர்.
இவருடைய பயோபிக்கை எடுக்கும் முயற்சியில் இப்போது ஒரு குழு இறங்கி இருக்கிறது. இந்த பயோபிக்கில் திருவள்ளுவராக நடிக்கப் போவது கலைச்சோழன் என்ற நடிகரும் வாசுகி ஆக நடிக்கப் போவது தனலட்சுமி என்ற நடிகையும் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயோபிக்கில் இளையராஜா இசையமைக்கப் போவதாகவும் இரண்டு பாடல்களை இவரே எழுதப் போகிறார் என்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.