Deva The Tribute!.. தேவா பிறந்த நாள் நிகழ்ச்சியில் இளையராஜா!..

 
deva ilayaraja

வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் தேனிசை தென்றல் தேவா. 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். குறிப்பாக வட சென்னை மக்களின் அடையாளமாக இருந்த கானா பாடலை தமிழ் சினிமாவில் புகுத்தியவர் தேவா.

கடந்த அக்டோபர் 17ம் தேதி மாரடைப்பு காரணமாக தேவா உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று தேவாவுக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. பொதுவாக, இது போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது வீடியோ மூலம் இரங்கல் தெரிவிப்பது இளையராஜாவின் வழக்கம். ஆனால் தேவாவின் மறைவுவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோவும் வெளியிடவில்லை. இதையடுத்து, பலரும் இளையராஜாவை மிகவும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில்தான், தேவாவின் பிறந்தநாள் விழா இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் அழைப்பின் பேரில் இசைஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தேவாவின் திருவுருவ படத்தை திறந்து வைக்கிறார். அதன்பின் பின் திரை உலக நண்பர்கள் மற்றும் இசை கலைஞர்கள் முன்னிலையில் Deva the Tribute என்கிற மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது.

Murugan ..
Murugan ..

5184 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web