×

ரசிகர்களுக்கு இளையராஜாவின் பிறந்தநாள் பரிசு!

தனது ரசிகர்களுக்கான பிறந்தநாள் பரிசை இசைஞானி இளையராஜா அறிவித்துள்ளார்.

 

தனது ரசிகர்களுக்கான பிறந்தநாள் பரிசை இசைஞானி இளையராஜா அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 76 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக அவரது பிறந்தநாளில் ஏதாவது இசை நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக நடக்கும். ஆனால் இம்முறை கொரோனா லாக்டவுன் காரணமாக எந்த மகிழ்ச்சியான செய்தியும் அவரது ரசிகர்களுக்கு இல்லை.

இதையடுத்து தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் உங்களை சந்திக்க விடாமல் கொரோனா காலகட்டம் தடுக்கின்றது. இருந்தாலும் நானே உங்களை நேரில் வந்து உங்கள் வீட்டிலேயே சந்திக்கப் போகிறேன். ஆம், இசை ஓடிடி என்ற ஒன்றை நான் ஆரம்பிக்கிறேன். இந்த இசை ஓடிடியில் நான் எனது இசை அனுபவங்களையும் பாடல்கள் கம்போஸ் செய்த போது ஏற்பட்ட சில சுவாரஸ்மான சம்பவங்களையும், பாடலை கம்போஸ் செய்யும் போது நாங்கள் உழைத்த உழைப்பு குறித்தும் விரிவாக கூற இருக்கிறேன். என்னைப் பற்றிய அபிப்ராயங்களை உலகெங்கிலும் உள்ள இசையமைப்பாளர்கள் தெரிவிக்க உள்ளனர். இதில் வெளியாவது வேறு எந்த தளத்திலும் காணக்கிடைக்காது. அதற்கான காத்திருப்பு நிச்சயம் வீண் போகாது’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News