தன் நண்பனுக்கு பிறந்தாள் வாழ்த்து சொன்ன இளையராஜா
இந்திய திரையுலகில் பின்னணி பாடகர்களில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் படத்தில் துவங்கிய அவரது பயணம் இறுதியாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்துடன் நின்றது. எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரைஅ அவர் பணியாற்றாத இசையமைப்பாளர்களே கிடையாது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கபட்டு எஸ்.பி.பி உயிரிழந்தார்.
இளையராஜா - எஸ்பிபி கூட்டணி என்பது தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலம். இவர்கள் இருவரின் நட்பு, திரையைத் தாண்டியது. இவரது இசையில் மட்டுமே கிட்டதட்ட 2000 முதல் 2500 பாடல்கள் வரை பாடியுள்ளதாக கூறப்ப்டுகிறது.
இந்த நிலையில் இன்று எஸ்பிபியின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ஆருயிர் நண்பனைப் பற்றி இசைஞானி இளையராஜா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது பதிவில், ஒரு இசையமைப்பாளரின் கற்பனையை அவரை விட வேகமாக யாராலும் புரிந்துகொள்ள முடியாது; ஒரு பாடலுக்காக எஸ்.பி.பி-யை விட யாரும் அதிக கவனத்தைச் செலுத்தியதும் கிடையாது. அவரது வாழ்க்கை, நட்பு மற்றும் 50,000 பாடல்கள் என்ற நிகரற்ற சாதனையை நாம் கொண்டாடுவோம். பிறந்தநாள் வாழ்த்துகள், எஸ்பிபி! என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு பாடலைப் பாட வரும்போது, இளையராஜா என்ன நினைக்கிறார் என்பதைப் பாடி முடிப்பதற்கு முன்பே எஸ்பிபி பிடித்து விடுவார் என்று இசைத் துறையில் ஒரு பேச்சே உண்டு. அதையே இன்று இளையராஜாவும் தனது வாழ்த்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB. pic.twitter.com/YXYgGpdvhN
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 4, 2026
