Categories: Cinema News latest news throwback stories

நாகேஷிற்கு பதிலாக நடிகரை மாற்றிய பாலச்சந்தர்… எல்லாம் இளையராஜா செஞ்ச வேலை!..

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான பிரபலங்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழில் அன்னக்கிளி திரைப்படம் மூலமாக இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு வேறு எந்த இசையமைப்பாளர்களும் கொடுக்காத அளவிற்கு ஹிட் பாடல்களாக கொடுத்தார் இளையராஜா.

இதனையடுத்து எக்கச்சக்கமான வாய்ப்புகளை பெற்றார். அப்போதைய காலக்கட்டத்தில் இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்றாலே அவர் பணிப்புரியும் பிரசாத் ஸ்டுடியோவின் வாசலில் காத்திருக்க வேண்டுமாம். ஏனெனில் இளையராஜாவின் பாடல்களுக்காகவே அப்போது படங்கள் ஓடின.

அப்படியிருந்தும் வாசு, மணிரத்னம் போன்ற இயக்குனர்களுக்கு குறைந்த விலையில் இசையமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா. இளையராஜாவிற்கு அப்போது நடிகர் ஜனகராஜோடு நட்பு இருந்தது. அந்த சமயத்தில் சினிமாவில் எப்படியாவது கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்தார் ஜனகராஜ். எனவே அவர் சினிமா வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தார்.

இளையராஜா செய்த வேலை:

இந்த நிலையில் பாலச்சந்தர் புது புது அர்த்தங்கள் என்கிற திரைப்படத்தை இயக்கினார். பாலச்சந்தரும் இளையராஜாவும் நல்ல பழக்கத்தில் இருந்தனர். புது புது அர்த்தங்கள் படத்தில் ஜாலி என்கிற ஒரு கதாபாத்திரத்தை நாகேஷிற்காக அமைத்திருந்தார் பாலச்சந்தர். நாகேஷ் ஒரு காலக்கட்டத்தில் குளிக்க கூட நேரமில்லாமல் நடித்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்தார். அதை காட்டும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை பாலச்சந்தர் எழுதியிருந்தார்.

ஆனால் படத்தில் தலையிட்ட இளையராஜா, பாலச்சந்தரிடம் பேசி அந்த வாய்ப்பை ஜனகராஜ்க்கு வாங்கி தந்துள்ளார். ஜனகராஜ் வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்த புது புது அர்த்தங்கள் படத்திற்கான வாய்ப்பு இப்படிதான் ஜனகராஜ்க்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: விவேக் இறந்ததை மட்டும் பேசுறீங்க!. அந்த ரெண்டு பேர் பத்தி யாருமே பேசல.. ஆதங்கப்பட்ட ராதாரவி…

Rajkumar
Published by
Rajkumar