Categories: Cinema News latest news

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் இளையராஜா.. அட இது செமயா இருக்கே!…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது பாடல்களால் இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர் இளையராஜா. 80 வயதை நெருங்கினாலும் சுறுசுறுப்பாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசைக்கச்சேரிகளையும் அவர் நடத்தி வருகிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு புதிய ஸ்டுடியோவை அவர் சில மாதங்களுக்கு முன்பு திறந்தார். எனவே, ரஜினி, கமல் உட்பட பலரும் அங்கு நேரில் சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்துள்ளார். ரஹ்மான் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களை பார்ப்பதற்காக அவர் அங்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ரஹ்மான் சமீபத்தில் Firdaus studio எனும் புதிய ஸ்டுடியோவை திறந்தார். அங்குதான் இசைஞானி – ரஹ்மான் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ‘மேஸ்ட்ரோ எங்கள் ஸ்டுடியோவுக்கு வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டுடியோவில் அவர் இசையை கம்போஸ் செய்வார்’ என பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட இசை ரசிகர்கள் பரவசமடைந்து நீங்கள் இருவரும் இணையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என ஹார்ட்டின் விட்டு வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா