Categories: Cinema News latest news

இளையராஜா எங்களை அடிமையாத்தான் நடத்துவார்!.. கொடுமைகளை புட்டு புட்டு வைத்த பிரபலம்..

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவனாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. இவரின் இசையில் வந்த பாடல்கள் தான் அனேக பேருக்கு ஒரு வரப்பிரசாதம். இவர் கர்நாடக இசையோடு மற்ற இசையையும் முறைப்படி கற்றவர். இவர் திரைத்துறையில் பல சாதனைகளை செய்திருந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல பேரின் பேச்சுக்கு ஆளாகியுள்ளார் இளையராஜா. அதாவது பழம்பெரும் இசை அரசரான எம்.எஸ்.வியின் டுரூப்ல இருந்த ஒரு இசைக் கலைஞர்தான் சங்கர் என்பவர்.

அவர் எம்.எஸ்.விக்கு அப்புறம் இளையராஜாவுடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறாராம். ஒரு சமயத்தில் இளையராஜாவிடம் இருந்து பிரிந்து விட்டாராம் சங்கர். அதற்கு காரணம் இளையராஜா தன்னிடம் வேலை பார்க்கும் உதவியாளர்களை அடிமைகளாக நடத்துவாராம்.

Ilaiyaraaja

அது பிடிக்காமல் தான் சங்கர் விலகிவிட்டாராம். மேலும் விஸ்வநாதனிடம் வேலை பார்க்கும் போது ஒரு வேளை டியூன் வரவில்லை என்றால் வரலைனா வேற ட்யூன் போடு என்று சொல்லுவாராம். ஆனால் இளையராஜா ட்யூனுக்கு நோட் எழுதுவாராம். அதை எழுதும் போது மற்றவர்கள் பார்த்து எழுத வேண்டுமாம். அப்படி எழுதும் போது ஏதாவது யாருக்காவது இருமல் வந்து இருமினாலோ அல்லது எதாவது ஒலி எழுப்பினாலோ மிகவும் கோபப்படுவாராம்.

அதே மாதிரி ஏஆர்.ரஹ்மானிடம் இளையராஜாவுக்கு பொறாமை இருப்பது மாதிரியான சில விஷயங்களையும் கூறினார்.அதாவது இளையராஜாவையும் ரஹ்மானையும் ஒரு விழாவிற்கு அழைத்திருக்கிறார்கள்.

sankar

அப்போது இளையராஜா தன் உதவியாளரிடம் சொல்லி ரஹ்மானின் உதவியாளரிடம் கேட்க சொல்லுவாராம். அதாவது ‘இருவரும் கலந்து கொள்ளும் விழாவில் ரஹ்மான் வந்த பிறகே வர வேண்டும் என நினைப்பாராம் இளையராஜா. ரஹ்மானுக்கு முன்னாடி வந்து காத்திருக்க கூடாது என நினைப்பாராம்.’ அதனாலேயே ரஹ்மான் கிளம்பிட்டாரா இல்லையானு அவர் உதவியாளரை வைத்து தெரிந்து கொண்ட பின்னர் இளையராஜா கிளம்புவாராம். இதை சங்கர் ஒரு பேட்டியின் போது கூறினார்.

Published by
Rohini