×

இளையராஜா அண்ணன் மகன் திடீர் மரணம் – நிறைவேறாத ஆசை

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் ஹோமோ ஜோ திடீரென மரணம் அடைந்திருப்பது அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் ஹோமோ ஜோ திடீரென மரணம் அடைந்திருப்பது அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் மூத்த அண்ணனான பாவலர் வரதராஜனின் அண்ணன் மகன் ஹோமோ ஜோ. இவர் பாவலர் மைந்தன் எனும் பெயரில் இயக்குனர் ஆர் வி உதயகுமாரிடம் பல ஆண்டுகளாக இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இப்போது தனது முதல் படமான நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார்.

அதன் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் தற்போது உடல்நிலைக் கோளாறு காரணமாக அவர் மரணம் அடைந்துள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News