×

எனக்கு போர்த்தும் சால்வைகளை இதற்கு கொடுப்பேன்! - எஸ்.பி.பியின் மனித நேயம்!..

 

இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தமிழ் மட்டுமின்றி இந்திய மொழி அனைத்திலும் பாடல்களால் ரசிககளை கட்டிப்போட்டவர்.

பொதுமக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்ததார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், இசை மேடைகளில் தனக்கு போர்த்தப்படும் சால்வைகள் பற்றி எஸ்.பி.பில். ஒரு பேட்டையில் கூறியுள்ளார்.

அந்த சால்வைகளை அள்ளி தனது காரில் போட்டுக்கொண்டு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சாலையோரங்களில் குளிரில் நடுங்கியவாறு படுத்திருக்கும் தெருவோர வாசிகளுக்கு அதனை கொடுத்துவிடுவேன் என ஒரு பேட்டியில் எஸ்.பி.பி கூறியுள்ளார். இது அவரின் மனிதநேயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எஸ்.பி.பி. சிறந்த பாடகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதர் என்பதாலேயே இவருக்கு எதிரிகளே இல்லை. அதனாலேயே திரையுலகினர் அனைவருக்கும் பிடித்தமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News