×

இன்னமும் நான் ஹீரோதான்… தன்னைப் பற்றிய வதந்தியை மறுத்த மேடி!

நடிகர் மாதவன் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியை அவர் மறுத்துள்ளார்.

 

நடிகர் மாதவன் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியை அவர் மறுத்துள்ளார்.

நடிகர் மாதவன் இந்தி, தமிழ் என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகராக இருந்தாலும், எந்த மொழியிலும் திடமான மார்க்கெட் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். விக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பின் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் கதாநாயகனாக நடித்தது போதும் என முடிவு செய்த அவர் முதன் முதலாக முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லபப்ட்டது.

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக இருந்து பின்னர் படத்தில் இருந்து வெளியேறினார். அந்த கதாபாத்திரத்தில்தான் மாதவன் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. அதை இப்போது மாதவன் தரப்பு மறுத்துள்ளது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸான சைலன்ஸ் படத்தில் கூட மாதவன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News