×

என்னால் தான் உங்களுக்கு இந்த அசிங்கம் - லட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட பீட்டர்பால் மனைவி

சமீபத்தில் நடிகை வனிதா விஜய்குமார் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் முதலில் பேட்டியளித்த வீடியோக்கள் வைரல் ஆகிய நிலையில் வனிதாவின் திருமணத்தை கண்டித்து வீடியோக்கள் வெளியிட்ட திரையுலக நட்சத்திரங்களின் வீடியோக்களும் வைரலாகியது.

 

குறிப்பாக சூர்யா தேவி என்ற பெண் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்து வெளியிட்ட வீடியோக்களும் வெளியிட்டிருந்தார். மேலும் சூர்ய தேவி லட்சுமி ராமகிரிஷ்ணனிடம் உதவி கேட்டு சென்றார். அதன் பின்னர் தான் சூர்ய தேவிக்கு ஆதரவாக லட்சுமி ராமகிரிஷ்ணன் வனிதாவிடம் வாக்குவாதம் செய்து பெரும் சர்ச்சைக்குள்ளானார்.

இந்த நிலையில் தற்போது பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத்,  லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், " நாங்கள் சொல்லித்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் எங்களுக்காக பேச வந்தார். ஆனால், வனிதா அவரை தரைகுறைவான வார்த்தைகளை பேசி அவமதித்துவிட்டார். எனவே எங்களால் தான் லட்சுமி மேடம் இந்த அவமானத்தை சந்தித்தார் என கூறி அவரிடம் மன்னிப்பு  கேட்டுள்ளார் சூர்ய தேவி.

From around the web

Trending Videos

Tamilnadu News