படத்துக்கு இதெல்லாம் ஒரு தலைப்பா? துணிந்து இறங்கிய பாலசந்தர்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா?

by Rohini |   ( Updated:2024-12-11 07:01:05  )
balachander
X

balachander

தமிழ் சினிமாவில் தன்னுடைய புதுமையான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். தற்போது தமிழ் சினிமாவில் பெரிய ஆளுமைகளாக இருக்கும் பல நடிகர்களை இந்த சினிமாவிற்கு அடையாளமாக தந்தவர். இவர் முதன்முதலில் நீர் குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

ஆனால் அந்தப் படத்தின் தலைப்பால் அவருக்கு பல சிக்கல்கள் எழுந்தன. பொதுவாக நீர் குமிழி என்ற வார்த்தைக்கு தோன்றியதும் மறைவது என்ற பொருளாம். அதனால் தன்னுடைய முதல் படத்திற்கு நீர் குமிழி என பாலச்சந்தர் பெயர் வைத்ததும் பல பேர் முதல் படத்திற்கு இப்படி ஒரு பெயரை வைக்கலாமா என அவருக்கு ஆலோசனை வழங்கினார்களாம்.

ஆனால் பாலச்சந்தர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் படத்தின் கதைக்கேற்பத்தான் தலைப்பை வைத்திருக்கிறேன் எனக் கூறி அந்த தலைப்பையே படத்திற்கு வைத்திருக்கிறார் .அந்த படம் வெளியானதும் மாபெரும் வெற்றியும் பெற்றது. அந்த படம் வெளியானதற்கு முன்பு படத்தை ஒரு இயக்குனர் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என சொன்னதோடு தன்னுடைய படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என இரண்டாவது பட வாய்ப்பு தந்திருக்கிறார்.

அந்தப் படம் தான் அனுபவி ராஜா அனுபவி. நாகேஷை ஹீரோவாக வைத்து இந்த படத்தை கே. பாலச்சந்தர் இயக்கினார். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படி அடுத்தடுத்து தன்னுடைய படைப்புகளால் இந்த சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறினார் பாலச்சந்தர். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும் அவரால் உருவாக்கப்பட்ட நட்சத்திரங்களும் இன்று அவருடைய ஆளுமைக்கு சாட்சியாக இருக்கின்றன.

ஆரம்பத்தில் தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் ஒரு வசனகர்த்தாவாகத்தான் பாலச்சந்தர் திரை வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு தான் 1965 ஆம் ஆண்டு நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்தியாவிலேயே திரைப்படத் துறைக்கான மிகப்பெரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உட்பட பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

நாடக எழுத்தாளர் இயக்குனராக இருந்தவர் படிப்படியாக இயக்குனர் சிகரமாக இந்த தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story