aish
Lalsalaam Rajini: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் நடித்திருக்கும் திரைப்படம் லால்சலாம். இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிப்பதாக தகவல் வெளியானது.
படத்திற்கு இசை ஏஆர்.ரஹ்மான். படத்திற்கான எல்லா வேலைகளும் முடிந்து போஸ்ட் புரடக்ஷனில் இருக்கிறது. பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது இப்போதைக்கு லால்சலாம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ வைரல்.. ஆதரவாக களமிறங்கிய சூப்பர்ஸ்டார்..!
படத்தில் இன்னும் இரண்டு பாடல்களை சேர்க்கலாம் என்ற ஐடியாவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ரஹ்மானிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். இன்னும் இரண்டு பாடல்கள் எனும் போது அவர் எப்பொழுது இசையை கொடுத்து பாடி அதை படத்தில் சேர்ப்பார்கள் என்ற சந்தேகமும் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. அவர் இருக்கிற பிஸியில் இதெல்லாம் சாத்தியமாகுமா என்றும் தெரியவில்லை.
ஆனால் கண்டிப்பாக பாடல்கள் வேண்டும் என நிற்கிறார் ஐஸ்வர்யா. இந்த பிரச்சினை ஒருபக்கம் இருக்க ரஜினி நடித்த சில புட்டேஜ்கள் அழிந்துவிட்டதாகவும் சில தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இதையும் படிங்க: சத்தமே இல்லாம சம்பவம் செய்த லியோ!.. பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த விஜய்!..
ஹார்டிஸ்க்கில் இருந்த சில காட்சிகள் எப்படியோ அழிந்துவிட்டதாக கூறுகிறார்கள். அதை திரும்பவும் பெற வெளி நாட்டிலிருந்து நல்ல தொழில்நுட்ப வல்லுனரை வரவழைத்து அதை மீண்டும் பெற முடியுமா? என்ற ஆலோசனையில் இறங்கப் போவதாக கூறுகிறார்கள். அதனால் படம் பொங்கல் அன்று வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…