Categories: Cinema News latest news

இது உங்களுக்கே ஓவரா இல்ல?.. முத்து படத்தில் மீனாவுக்கு பதிலா?.. ட்ரோலுக்கு உள்ளான வாய்ப்பேச்சு நடிகை!..

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான படம் முத்து. இது ஒரு மலையாள படத்தின் ரீமேக் ஆகும். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட். ஏ.ஆர்.ரகுமான் இசையில் சக்க போடு போட்டன பாடல்கள்.

rajini meena

இந்த நிலையில் முத்து படத்தில் மீனா கதாபாத்திரமான ரெங்கநாயகி ரோலுக்கு முதலில் ரஜினி என்னை தான் நடிக்க கேட்டார் என்று ஒரு பிரபலத்தின் மகள் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வேரு யாருமில்லை. நடிகை மதுவந்தி.

இதையும் படிங்க : யாரும் எதிர்பாராத சம்பவம்!.. ‘வாரிசு’ பட க்ளைமாக்ஸில் ஆச்சரியப்படுத்திய விஜய்!..

இவர் பிரபல நடிகரும் ரஜினியின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் மகள் தான் இந்த மதுவந்தி. இவரை ஏற்கெனவே தர்மதுரை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளராக நடித்திருப்பார். இவர் தான் முதலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாம்.

meena rajini

ரஜினியே வந்து கேட்டதாகவும் ஆனால் மதுவந்தியின் பாட்டி அவருடைய படிப்பின் காரணமாக வேண்டாம் என கூறியதாகவும் அதன் பின்னரே அந்த வாய்ப்பு மீனாவுக்கு சென்றிருக்கிறது. இவர் நடிகை என்பதையும் தாண்டி ஏகப்பட்ட சர்ச்சை பேச்சுக்களிலும் சிக்கியுள்ளார்.

மேலும் இவர் கூறும்போது இன்னும் ஒரு வெற்றிடம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. கோவை சரளாவிற்கு பதில் வேறு யாருமில்லை. ஆனால் அது போன்று நடிக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா என்று பட இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சவால் விடுவது மாதிரி பேட்டியில் கூறியுள்ளார்.

meena mathuvanthi

விவாகரத்து ஆன மதுவந்தி மகனுடன் தனியாக தான் வாழ்ந்து கொண்டு வருகிறார். அவருக்கு சைனஸ் பிரச்சினை இருக்கும் காரணத்தால் தான் முடி வளர்த்துக் கொள்வதில்லை என்றும் கூறியிருக்கிறார். படத்திற்கு தேவைப்பட்டால் விக் வைத்து நடித்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini