
Cinema News
புள்ளப்பூச்சியெல்லாம் சூர்யாவுக்கு வில்லனா? ஆண்டவன் மேல பாரத்த போடுவோம்.. வெளியான சூர்யா43 அப்டேட்
Published on
By
Surya 43: தமிழ் சினிமாவில் தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யாவின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் ஒரு அதிசயத்து பார்க்கக்கூடிய வளர்ச்சியாகவே இருந்து வருகிறது. ஏனெனில் கார்த்தி அளவுக்கு சூர்யா ஆரம்பத்தில் அந்த அளவு சுறுசுறுப்பானவரும் கிடையாது. அனைவரிடமும் சகஜமாக பேசுபவரும் கிடையாது.
சினிமாவே பிடிக்காது என்ற நிலைமையில் தான் சூர்யா முதலில் இருந்திருக்கிறார். சூர்யாவுக்கும் சினிமா வேண்டாம் என்றுதான் சிவகுமார் அவரை சினிமா பக்கம் காட்டாமல் இருந்திருக்கிறார். ஆனால் கால சூழ்நிலை எப்படியோ சூர்யாவை இந்த சினிமாவிற்குள் இழுத்து விட்டது. ஆரம்பத்தில் நடிக்கவும் தெரியாமல் ஆடவும் தெரியாமல் சில இயக்குனர்களிடம் பேச்சும் வாங்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தேறி இன்று பாலிவுட் வரை சூர்யாவின் புகழ் பரவி இருக்கிறது.
இதையும் படிங்க: தள்ளிப்போகும் தளபதி 69!.. விஜய் நினைப்பது நடக்குமா?!.. பரபர அப்டேட்!…
அதற்கு காரணம் நடிப்பின் மீது அவர் காட்டிய ஆர்வம் என்று தான் சொல்ல வேண்டும், தனியாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ,மாணவர்களுக்காக ஒரு அறக்கட்டளை நிறுவனம் என அடுத்தடுத்து தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே போகிறார் சூர்யா. பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். ஒரு சில படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பாலிவுட்டில் தடம் பதிக்க மும்பையிலே செட்டில் ஆகி அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார் சூர்யா.
தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்பாராஜ் படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். அவருடைய 43-வது படமாக இது இருக்கும். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். வேறு எந்த நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஒரு நடிகர் ஒப்பந்தமாக இருப்பதாக சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
viji
இதையும் படிங்க: ஓடிடி-யில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 5 படங்கள்!.. முதலிடத்தில் மாஸ் காட்டும் சலார்…
அவர் வேறு யாருமில்லை. உறியடி விஜயகுமாராம் .பார்ப்பதற்கு சாதுவாக இருப்பவர் உறியடி விஜயகுமார். தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமைகள் கொண்டவர் உறியடி விஜயகுமார். சமீபத்தில் தான் இவருடைய ஒரு படம் வெளியானது. அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். வில்லனுக்கு உரிய எந்த ஒரு தகுதியும் இல்லாத உறியடி விஜயகுமார் எப்படி இவ்வளவு பெரிய பட்ஜெட் உள்ள சூர்யா படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க முடியும் என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்து வருகின்றன. இதற்கு அந்த படத்தில் அவருடைய நடிப்பின் மூலமாகத்தான் உறியடி விஜயகுமார் பதில் சொல்ல வேண்டும்.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....