×

கொரோனா சோதனை என சொல்லி பெண்ணின் அந்தரங்க உறுப்பில்…. காமக்கொடூரனின் ஆபாச செயல்!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா சோதனை மேற்கொள்ள சென்ற போது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா சோதனை மேற்கொள்ள சென்ற போது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

நாடெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்று பலரும் தாமாகவே முன்வந்து சோதனை செய்துகொள்கின்றனர்.

ஆனால் அப்படி சென்ற பெண் ஒருவருக்கு மிகவும் மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியில் வேலை செய்யும் பெண் ஒருவர் தன்னுடன் வேலை செய்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனக்கும் வைரஸ் தொற்று இருக்குமோ என சந்தேகித்துள்ளார். இதனால் அருகில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா அவசர சிகிச்சை மையத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த லேய் டெக்னீசியன், மூக்கு மற்றும் தொண்டையில் சளி மாதிரிகளை எடுத்தது மட்டுமில்லாமல் கொரோனா இருப்பதை உறுதி செய்ய பிற்ப்புறுப்பில் இருந்தும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி ஒன்றும் அறியாத  அந்த பெண் அதற்கும் சம்மதித்துள்ளார். ஆனால் இதுபற்றி வீட்டுக்கு சென்றதும் குடும்பத்தினரிடம் சொல்ல அவரது சகோதரர் கேட்டு அதிர்ச்சியாகியுள்ளார். இதையடுத்து அந்த நபர் மீது புகாரளிக்க, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News