×

வருமான வரித்துறை அதிரடி: இன்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடக்குமா?

நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோர்களது இல்லங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே

 

இந்த ரெய்டில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இருப்பினும் விஜய் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட முறைகேடான படம் கைப்பற்றப் படவில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் வருமான வரி சோதனை முடிந்து மீண்டும் நெய்வேலியில் நடைபெற்று வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டு வருகிறார். இதனை அடுத்து தற்போது திடீரென வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பிலிருந்து விஜய் சென்னைக்கு வந்து வருமான வரித்துறை முன் ஆஜராவார் என தெரிகிறது

விஜய் மட்டுமின்றி ஏஜிஎஸ் நிறுவனத்தின் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியவர்களும் இன்று ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே வருமான வரித்துறை ரெய்டு காரணமாக இரண்டு நாட்கள் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தடைபெற்ற நிலையில் இன்றும் படப்பிடிப்பு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News