×

நம்ப முடியாத அளவுக்கு பெட்ரோல் வரி உயர்வு – மக்களுக்கு மேலும் அதிர்ச்சி !

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மேலும் 8 ரூபாய் வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

 

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மேலும் 8 ரூபாய் வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

கொரோனா காரணமாக உலகெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால், கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்துள்ளது. ஆனால் அதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது.

சில வாரங்களுக்கு முன்னர் கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தி பெட்ரோல் விலையைக் குறையாமல் பார்த்துக்கொண்டது மத்திய அரசு. இந்நிலையில் நேற்று  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 8 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ளும் மசோதாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள வரி உயர்வு வரம்பை சேர்த்து பெட்ரோலுக்கு ரூ 18ம் டீசலுக்கு ரூ 12 ம் அதிகமாகியுள்ளது. இதனால் மீண்டும் பெட்ரோல் விலை அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News