×

நாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை- உலக நாடுகள் பட்டியலில் இந்தியா எங்கு இருக்கிறது தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு மார்ச் 7 ஆம் தேதி கண்டறியப்பட்டது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறத். கொரோனா வைரஸால் இன்று உலகமே தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவில் 72 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இன்றுவரை இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2.3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.இதில் 6000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 6 ஆவது இடத்தில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்வது மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி உள்ளது. தொடர்ந்து பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News