×

கொரோனா 2வது அலையே முடியல... அடுத்து 3வது அலையாம்... அதிர்ச்சி தகவல்

 
corono

இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வீசி வருகிறது. முதல் அலையை விட இந்த அலையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிகமானது. இந்தியாவில் 1,20,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3380 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை 2,86,94,879 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,67,95,549 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 15,55,248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22,78,60,317 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா கொரோனா 3வது அலையை சந்திக்கவுள்ளதாக் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத் கூறியுள்ளார். இந்தியாவில் 3வது அலையை தவிர்க்க முடியாது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனார். மேலும், இந்த முறை இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளனர். 

இந்த அலை செப்டம்பர் - அக்டோபர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் செய்ய வேண்டும். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News