×

லைக்காவுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர் ஷங்கர்... இந்தியன் 2 என்னாகும்?

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. 
 
லைக்காவுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர் ஷங்கர்... இந்தியன் 2 என்னாகும்?

கமலை வைத்து இந்தியன் என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா இந்தியன் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 

படத்தின் ஷூட்டிங் பூந்தமல்லியில் இருக்கும் ஸ்டூடியோவில் பிரமாண்டமாக நடந்துகொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெரும் விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து, கொரோனா சூழலால் ஷூட்டிங்குக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

கொரோனா லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ஷூட்டிங்குகள் தொடங்கப்பட்ட நிலையில், கமல் தமிழக சட்டமன்றத் தேர்தல் வேலைகளில் பிஸியானார். ஷூட்டிங் தொடங்கலாம் என போன ஜனவரி மாதம் முதலே லைக்கா தரப்பை ஷங்கர் உஷார்ப்படுத்திய நிலையில், பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். 

இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஜூன் மாதம் முதல் கமல்ஹாசன் டேட்ஸ் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஷங்கர் தரப்பை லைக்கா அணுகியிருக்கிறது. ஆனால், ஜூனில் தனது மகள் திருமணத்தை வைத்திருக்கும் ஷங்கர், அதன்பிறகு ஜூலை முதல் ராம்சரணை இயக்கும் படத்தில் பிஸி என்றும், அதன்பிறகு அந்நியன் இந்தி ரீமேக்காக ரன்வீர் சிங்கை வைத்து எடுக்கும் படத்தில் பிஸி என்றும் தயாரிப்பு தரப்பிடம் சொல்லியிருக்கிறார். அதேபோல், 2023 ஜனவரிக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங்கைத் தொடங்கலாம் என்றும் ஷங்கர் சொல்லியதால் லைக்கா தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறதாம். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News