Connect with us
kamal

Cinema News

லேட்டா வந்தாலும் கெத்து காட்டுறது நாங்கதான்!.. சினிமாவில் எந்தப் படமும் செய்யாத சாதனை!.. தட்டித் தூக்கிய இந்தியன் 2!..

கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் தாக்கம் இன்று வரை
அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்து கிடக்கிறது. அந்த அளவுக்கு இந்தியன் படம் தென்னிந்திய அளவில் அதிகமாக பேசப்பட்ட படமாக அமைந்தது. கதையில் இருந்து பாடல்கள், இசை, ஸ்கிரீன் ப்ளே என அனைத்திலும் பிரமிப்பை ஏற்படுத்திய படமாக இந்தியன் படம் அமைந்தது.

இந்த நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும் முனைப்புடன் தயாராகி கொண்டு வருகிறது. ஷங்கர் முழு மூச்சுடன் இறங்கி படத்தை முடித்து சீக்கிரம் வெளியிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளி நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

மேலும் முதல் பாகம் வெளியான நேரம் இந்த பான் இந்தியா, கோடிகளில் வசூல், டிஜிட்டல் ரைட்ஸ் என எதுவும் இல்லாத நிலை. ஆனால் இப்போது அப்படி இல்லை. அதனால் ஷங்கர் இந்தியன் 2 படத்தை உலகளவில் ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் உரிமம் பல கோடிகளில் பேசப்பட்டு வருகிறதாம். அதுவும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாமாகவே முன்வந்து இதுவரை அந்த நிறுவனமே வாங்காத தொகைக்கு இந்தியன் 2 படத்தை வாங்கியிருக்கிறதாம்.

இதையும் படிங்க : நான் மட்டும் கஷ்டப்படணுமா!.. இந்த கோர்ஸ் எடுங்க!. காலேஜில் மணிவண்ணனை கோர்த்துவிட்ட சத்தியராஜ்…

இதை பார்க்கும் போது உலகளவில் பேசப்பட்ட கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் , பாகுபலி போன்ற படங்களின் டிஜிட்டல் உரிமத்தை விட இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமம் அதிகம் என்று சொல்கிறார்கள். எப்படியோ படம் வெளியாவதற்கு
முன்பே ஷங்கர் ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டார் என்று கூறிவருகிறார்கள். தென்னிந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு நல்ல அங்கீகாரம் என்றே கூறுகின்றனர்.

Continue Reading

More in Cinema News

To Top