Categories: Cinema News Gossips latest news

இனி இந்தியன் 2 என்னோட கண்ட்ரோல்.! ஆனால்..? ஆண்டவர் படத்துக்கு செக் வைத்த உதயநிதி.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை வெளியான அனைத்து தமிழ் திரைப்பட ரெகார்ட்ஸ்-ஐ அசால்டாக முறியடித்து வருகிறது. இன்னும் மிச்சம் இருப்பது மாஸ்டர் படத்தின் தமிழக வசூலும், 2.ஓ படத்தின் மொத்த வசூல் தான்.

இதனை தொடர்ந்து ஆண்டவர் கமலின் அடுத்தடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது. அடுத்து கமல் நடிப்பில் பிரமாண்டமாக தயாராக இருக்கும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த திரைப்படம் சில காரணங்களால் ஷூட்டிங் தடைபட்டது. அதன் பிற்காடு இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்க தயாராகி தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.

இதையும் படியுங்களேன் – தயவு செஞ்சு இப்படி செய்யாதீங்க.. மறுபடியும் ஷூட்டிங்.! கடுப்பாகி எச்சரித்த தளபதி விஜய்.!

தற்போது விக்ரம் வெற்றி, லைகா மற்றும் உதயநிதி இருவரையும் புத்துணர்ச்சியாகியுள்ளது. ஆதலால், லைகா நிறுவனத்திடம் உதயநிதி ஆஃபர் கொடுத்துள்ளாராம். இதுவரை செலவு செஞ்சதை விட்டுவிடுங்கள், இனி செலவு செய்யும் பணத்தை கடனாக நான் தருகிறேன். தமிழக வெளியீட்டு உரிமையை நான் வாங்கி கொள்கிறேன்.

ஆனால், ஒரு கண்டிஷன், தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவிக்கு கொடுத்து விட வேண்டும் என ஆண்டவர் படத்துக்கு செக் வைத்துள்ளார் தயாரிப்பாளர் உதயநிதி.  இதற்கு லைகா நிறுவனமும் சம்மதித்ததாக தெரிகிறது.

Manikandan
Published by
Manikandan