×

இந்தியன் 2 பஞ்சாயத்து.. நடந்தது என்ன?... நீதிபதிகள் கூறியது இதுதான்...

 
indian2

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல்கள் இடியாப்பம் போல வந்துகொண்டே உள்ளன. தற்போது ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 பட வேலைகள் பாதியிலேயே நிற்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செட்டில் கிரேன் விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்பட 3 பேர் பலியானார்கள்;. அப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இதுவரை துவங்கப்படவில்லை.

இதற்கிடையே ராம் சரண், ரன்வீர் சிங் ஆகியோரின் படங்களை இயக்க ஒப்பந்தமாகி விட்டார் ஷங்கர். இதைப் பார்த்த லைகா நிறுவனமோ இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் புதுப்படத்தை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது லைகா. இந்த பிரச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்க்க இயலாது, நீங்களே பேசித் தீர்க்கவும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஷங்கர், லைகா இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


ஜூன் முதல் அக்டோபருக்குள் இந்தியன் 2 வேலையை முடித்துக் கொடுக்கிறேன் என்று ஷங்கர் கூற லைகா அதை ஏற்கவில்லை. ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று லைகா தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 பிரச்சனையை எப்படியாவது தீர்த்து வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ளார் கமல். ஆனால், விடாது கருப்பு என்பது போல் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லையாம்.

ஷங்கர், லைகா நிறுவனம் இடையேயான சமரசத்தில் கமல்; தோல்வி அடைந்து விட்டாராம். இதையடுத்து நீதிமன்றம் சொல்படியே நீங்கள் கேளுங்கள் என்று கமல் ஒதுங்கிவிட்டதாக தகவல் தெரிய வருகிறது.

இந்தியன் 2 படம் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு வெளியானால் தன் இமேஜ் வேற லெவலுக்கு போய் இருக்கும் என்று நினைத்தாராம். ஆனால் தேர்தலுக்கு முன்பு இந்தியன் 2 ரிலீஸாகவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் கடைசிவரை போராடி தோல்வி அடைந்தார். மேலும் அவரது கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகளும் விலகிவிட்டார்கள். தற்போது 3 முக்கிய கொள்கைகளை கட்சித் தொண்டர்களுக்கு அறிவித்த கமல், விரைவில் உருமாறிய மக்கள் நீதி மய்யத்தைக் காண்பீர்கள் எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News