×

க்யூட்னஸ் ஓவர்லோடட்... குட்டிப் பாப்பா ஹன்விகா...குடும்ப போட்டோவை வெளியிட்ட நடராஜன்

இந்திய கிரிக்கெட் வீரரான சேலத்தைச் சேர்ந்த நடராஜன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். 
 

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணியுடன் நெட் பவுலராக தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சென்றிருந்தார். இந்திய வேகங்கள் காயத்தால் அவதிப்படவே டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளிலும் களமிறங்கி அசத்தினார் நடராஜன். 


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்குக் குழந்தை பிறந்தநிலையில், அவர் முதல் டெஸ்டுடன் இந்தியா திரும்பிவிட்டார். ஆனால், அதே சமயத்தில் நடராஜனுக்கும் முதல் குழந்தை பிறந்தது. ஆனால், அவர் குழந்தையை விட தேசத்துக்கான பணியே தலையாயது என முடிவெடுத்து ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிட்டார். 


ஆஸ்திரேலிய தொடரை வெற்றிகரமாக முடித்து திரும்பிய நடராஜனுக்கு, சொந்த ஊரான பாப்பம்பட்டியில் சாரட் வண்டி, மேள,தாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், தனது பெண் குழந்தைக்கு ஹன்விகா என நடராஜன் பெயர் சூட்டியிருக்கிறார். அத்தோடு, மனைவி மற்றும் குழந்தையோடு இருக்கும் போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார். அந்த போட்டோ இப்போது வைரலாகி வருகிறது. 

வாழ்த்துக்கள் நட்டி!


 

From around the web

Trending Videos

Tamilnadu News