×

இந்தியாவின் தோல்வி இன்னும் சில நிமிடங்களில் – டெஸ்ட்டிலும் வொயிட்வாஷ் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற இருக்கிறது.

 

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற இருக்கிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்தியா அங்கு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளை முடித்துவிட்டு தற்போது டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 242 ரன்கள் சேர்த்தது.

பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய இந்தியா படுமோசமாக விளையாட 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு வீரர்கூட நிலைத்து நின்று விளையாடாததால் மோசமான ஸ்கோரில் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸின் 7 ரன்கள் முன்னிலையோடு வெற்றி இலக்காக 132 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய நியுசிலாந்து அணி தற்போது வரை 98 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 34 ரன்களே தேவை என்ற நிலையில் நியுசிலாந்து அணி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News