Robo Shankar: அப்பா நீ இல்லாத இந்த மூனு நாள்!… இந்தரஜா சங்கரின் சோகப் பதிவு!….
சின்னத்திரை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரோபோ சங்கர். அதன்பின் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார் .விஜய், அஜித், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பலருடனும் நடித்தார். நன்றாக சினிமாவில் வளர்ந்து கொண்ட நேரத்தில் அதிகப்படியான மது பழக்கம் காரணமாக அவரின் உடல் நிலை பாதித்தது. எனவே சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மீண்டும் உடல்நலம் பாதிப்பு: அதன்பின் உடல்நலம் தேறி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திரைப்படத்தின் ஷுட்டிங்கில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த மூன்று நாட்களாகவே இவர் தொடர்பான செய்திகள்தான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்திரஜாவின் சோகப்பதிவு: இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை இட்டிருக்கிறார். அதில் ‘நீ இல்லாமல் மூன்று நாட்கள் சென்று விட்டது. எங்களை நிறைய சிரிக்க வைத்ததும் நீதான்.. இப்ப நிறைய அழ வைக்கிறதும் நீதான். இந்த மூன்று நாட்கள் நீ இல்லாம எனக்கு உலகமே தெரியல.. நீ இல்லாத இந்த குடும்பத்தை எப்படி கொண்டு போகிறோம் என்று தெரியல.. ஆனா நீ எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி கண்டிப்பா நான் ஸ்ட்ராங்கா இருப்பேன். தம்பி இந்த மூணு நாளா ரொம்ப தேடுறான் உன்ன..
கண்டிப்பா நீ உன்னோட நண்பர்களோட மேல சந்தோஷமாதான் இருப்பே.. நீ சொல்லிக் கொடுத்த மாதிரி விமர்சனங்களுக்கு பயப்பட மாட்டேன்பா.. கண்டிப்பா உன் பேர காப்பாத்துவேன்.. உங்கள பெருமைப்பட வைப்பேன்.. லவ் யூ அண்ட் மிஸ் யூ அப்பா.. உங்களுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச போட்டோ இது.. எல்லாருமே இந்த போட்டோ பார்த்து சொல்லுவாங்க ‘நீ அப்படியே உங்க அப்பாவோட ஜெராக்ஸ்’னு.. நான் எப்பவுமே உன்ன மாதிரியே இருப்பேன் அப்பா’ என ஃபீலிங் கூட பதிவிட்டிருக்கிறார்.
