×

மானங்கெட்ட உலகம் இது… தனது தற்கொலையை பேஸ்புக்கில் லைவ் ஆக ஒளிபரப்பிய நபர்!

திருப்பூர் மாவட்டத்தைச் ராம்குமார் என்ற நபர் தான் வீட்டில் தற்கொலை செய்வதை பேஸ்புக்கில் லைவ்வாக பகிர்ந்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்டத்தைச் ராம்குமார் என்ற நபர் தான் வீட்டில் தற்கொலை செய்வதை பேஸ்புக்கில் லைவ்வாக பகிர்ந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கார் ஓட்டுனர். அவருக்கு  சுகாசினி என்ற மனைவியும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ராம்குமாரின் மனைவி சுகாசினி பனியன் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். கொரோனா லாக்டவுன் என்பதால் இவர்களின் மகன் ஊரில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளான். நேற்று வழக்கம் போல சுகாசினி வேலைக்கு சென்றுவிட, வீட்டில் தனியாக இருந்துள்ளார் ராம்குமார். அப்போது தனது பெற்றோருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும், மகனை நன்றாக பார்த்துக்கொள்ளும் படியும் சொல்லியுள்ளார்.

பின்னர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ ஆன் செய்துவிட்டு பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ராம்குமாரின் நண்பர்கள் அவரின் மனைவிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைவரும் வீட்டுக்கு வருவதற்குள், ராம்குமாரின் உயிர் பிரிந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அனைவரும் உறைந்து போயுள்ளனர். பின்னர் போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட அவர்கள் ராம்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் ‘கேடுகெட்ட  உலகமிது. இங்கு வாழ விருப்பமில்லை. யாரும் பீல் பண்ணாதீங்கஎன தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்குமாரின் மரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News