Connect with us

Cinema News

அஜித்திற்கு அடி அதிகம்.! ஆனா வெளியே காட்டிக்கல.! நேரில் பார்த்தவரின் தகவல்.!

அஜித் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை படத்தின் ரிலீஸ் அடுத்த வாரம் வியாழக்கிழமை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை  H.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார்.

ajith

இப்படத்தின் இருந்து இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு மேக்கிங் வீடியோ வெளியானது. அதில்,  மேக்கிங் வீடியோவில் அஜித் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடக்கும் போது தவறுதலாக பைக்கில் இருந்து கீழே விழுந்து விடுவார். பின்னர் உடனே மீண்டும் எழுந்து அந்த பைக்கை ஓட்டி அந்த காட்சியை செய்து முடிப்பார்.

 

இந்த காட்சி பற்றி அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், அந்த விபத்து நடக்கையில் நான் அஜித்தின் பின்னேதான் வந்துகொண்டிருந்தேன் அப்போதுதான் அந்த விபத்து நடந்தது.

ஆனால், அஜித் தனக்கு அடி பட்டதை கூட வெளியில் காட்டி கொள்ள வில்லை. உடனே அந்த காட்சியை திரும்ப எடுத்து அதனை ஓகே செய்து விட்டார். அதன் பின்னர் தான் எனக்கு தெரியும் அஜித்திற்கு பலமாக அடிபட்டு விட்டது. ஆனால், அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இதையும் படிங்களேன் –

அந்தக்காட்சி ஒழுங்காக வர வேண்டும் என்பதற்காக அந்த பைக்குக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அஜித் . மற்றபடி அவர் உடலைப் பற்றி கண்டுகொள்ளவில்லை என்று  கார்த்திகேயா தெரிவித்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top