ஹாரர் படமான Insidious Out of the Further-ன் மிரட்டலான ட்ரெய்லர்!
Aug 6, 2026, 19:31 IST
ஹாலிவுட்டில் உருவாகியுள்ள புதிய சூப்பர்நேச்சுரல் ஹாரர் ஜானர் படம் தான் 'இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்' (Insidious: Out of the Further). இந்த படத்தை இயக்குநர் ஜேக்கப் சேஸ் இயக்கியுள்ளார்.
இதில் அமெலியா ஈவ், பிராண்டன் பெரேயா, மெய்ஸி ரிச்சர்ட்சன்-செல்லர்ஸ், லின் ஷாயே ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது, இதன் ஃபைனல் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
