யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலயே… மாதம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பார்த்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கணக்கு முடக்கம்

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலயே… மாதம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பார்த்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கணக்கு முடக்கம்

இன்றைய கால கட்டங்களில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பெரிய நிறுவனங்களை விட நல்ல வருமானம் தரும் தளங்களாக உள்ளன. இதன் மூலம் பலரும் லட்சம் லட்சமாக சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தியவர்தான் இன்ஃப்ளுயன்சர் அஷ்வனி. தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இவர்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரத்யேகமான கண்டெண்களை பார்க்க சப்ஸ்கிரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்தி, தனது ரசிகர்களுக்காக பிரத்யேகமான கண்டெண்ட்களை வழங்கி வந்தார். இந்த பிரத்யேக வீடியோக்கள் மற்றும் பதிவுகளைப் பார்க்க, ஒரு பயனாளர் மாதம் ரூ.399 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரது கண்டெண்ட்களுக்காகவே சுமார் 28,500 பேர் இவரை சப்ஸ்கிரைப் செய்திருந்தனர். கணக்கிட்டுப் பார்த்தால், 28,500 பயனாளர்கள் மூலம் இவருக்கு மாதம் ஒன்றிற்கு தோராயமாக ரூ. 1 கோடியே 13 லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைத்து வந்தது. கடண்டஹ் இரு வாரமாக இவரது வருமானம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலயே… மாதம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பார்த்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கணக்கு முடக்கம்

இந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை பல சினிமா நட்சத்திரங்களை விட இஸ்டாகிரமில் அதிகம் சம்பாதித்து வந்த அஷ்வனியின் கணக்கு தற்போது திடீரென இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. Community Guidelines மீறலா அல்லது தொழில்னுட்ப கோளாறு காரணமாக முடக்கப்பட்டுள்ளதா என்ற விபரம் தெரியவில்லை. இதனால் பணம் செலுத்திய சப்ஸ்கிரைபர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலயே… மாதம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பார்த்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கணக்கு முடக்கம்

From Around the web