Categories: Cinema News latest news

ஐயோ அந்த நடிகையா? ‘அந்தகன்’ படத்தில் சிம்ரனுக்கு பதில் நடிக்க இருந்தவர்?

Simran: தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் அந்தகன். இது ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்தான். தன் மகனுக்காக ஒரு பெரிய ஹிட்டை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் தியாகராஜன். ஆரம்பத்தில் இருந்தே மகனின் நலனுக்காகவே வாழ்ந்தவர் தியாகராஜன்.

ஏன் பிரசாந்துக்கு வரும் கதைகளை கூட தியாகராஜன் தான் கேட்பார் என்றும் கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் அது எல்லாம் இல்லை. பொய். பிரசாந்த் தான் கதை கேட்பார் என சமீபத்தில் தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார். இந்த நிலையில் அந்தகன் திரைப்படத்தின் அனுபவத்தை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் தியாகராஜன்.

இதையும் படிங்க: தனுஷுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்!.. என்னை அறிந்தால் போல பேர் வாங்கி தருமா?!…

அந்தாதூன் ஹிந்தி படத்தை முதலில் பிரசாந்த்தான் பார்த்தாராம். பார்த்துவிட்டுத்தான் தியாகராஜனிடம் சொல்லியிருக்கிறார். அதன் பிறகே அதன் தமிழ் ரைட்ஸை தியாகராஜன் வாங்கினாராம். முதலில் அந்தப் படத்தை தியாகராஜன் இயக்குவதாகவே இல்லையாம். ஒரு பெரிய இயக்குனரை வைத்துதான் இயக்க நினைத்திருக்கிறார்.

கதை கேட்டதும் முதலில் வந்த இயக்குனர் இந்தப் படத்திற்கு ஏமி ஜாக்சனை நடிக்க வைக்கலாம் என்று கூறினாராம். உடனே தியாகராஜன் ‘ஏமி ஜாக்சனா’ என சின்ன நெருடல் இருந்திருக்கிறது. சரி பரவாயில்லை என நினைத்து ஓகே சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: நாங்க பேசிக்க மாட்டோமா? வெங்கட் பிரபுவை ஒரே மாதிரி கலாய்த்த அஜித் விஜய்

அதற்குள் அந்த இயக்குனர் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து படம் எடுக்கப் போகிறேன். அதனால் ஒரு ஆறு மாதம் கழித்து இந்தப் படத்தை எடுக்கலாம் என சொன்னாராம். இது ஒரு வகையில் தியாகராஜனுக்கு சங்கடத்தை தந்தாலும் அப்பாடா என்ற அளவுக்கு பெருமூச்சு விட்டாராம்.

emi

ஏனெனில் ஏமி ஜாக்சனை நடிக்க வைக்க தியாகராஜனுக்கு விருப்பமே இல்லையாம். சிம்ரனை பொறுத்தவரைக்கும் ஒரு திறமைசாலியான நடிகை. கூடவே நல்ல தமிழ் தெரிந்த பெண்ணும் கூட என தியாகராஜன் கூறியிருந்தார். அவர் நினைத்ததை போல அந்தகன் படத்தில் பிரசாந்த் நடிப்பையும் தாண்டி சிம்ரன் ஸ்கோர் செய்திருப்பார் என்றுதான் சொல்லவேண்டும்.

இதையும் படிங்க: கோட் கிளைமேக்ஸில் தோனியும், விஜயும் ஒரு செம சீன்!.. ஆனா நடக்காம போச்சே!…

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini