ஜெய்லர் படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று இருக்கிறது. அதில் ரஜினியின் நடிப்பு மட்டுமல்லாமல் படத்தின் காட்சிகள் என பலவையுமே அப்ளாஸ் வாங்கி வருகிறது. இந்த வகையில் ஜெய்லர் குறித்து பெரிய சுவாரஸ்ய தகவல்களையுமே படக்குழு ரிலீஸ் செய்து வருகிறது.
ரஜினிகாந்திற்கு படத்தில் டார்க் கலரில் ட்ரெஸே கொடுக்கப்படவில்லை. இதற்கு காரணம், லைட் கலர் சட்டை போட்டால் தான் அவர் அந்த சீனுடன் ஒன்றி போகிறார். டார்க் கலரில் சட்டை போடும் போதும் இன்னும் மாஸாக தெரிகிறார். அவரின் ஸ்டைலை குறைத்து காட்சியோடு அமர்த்தவே எங்களுக்கு போதும் என்று ஆகி விட்டது.
இதையும் படிங்க: நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர்களிடம் சண்டை போட்ட நடிகர்கள்! வாய்க்கொழுப்பால் பல்பு வாங்கிய வடிவேலு
அதிலும் ரஜினியின் பேரனை வில்லன்கள் ஐஸ்க்ரீம் வண்டி முன்பு கொல்ல முயற்சிக்கும் போது பின்னாடி இருந்த பள்ளிக்கூடமே வி.எஃப்.எக்ஸ்-ல் தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. யோகிபாபு காரில் ரஜினியை இடிப்பது போல இருக்கும் காட்சியில் கூட பின்னாடி இருக்கும் கடையும் தான். ஆனால் இந்த காட்சிகள் வி.எஃப்.எக்ஸ் என தெரியாதது போல அமைப்பதே எங்களுக்கு முக்கியமான விஷயமாக இருந்ததாக ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யார் வீட்டு காசு? தயாரிப்பாளர் தலையில் துண்ட போட வைத்த சங்கர்! 10 படம் எடுத்துடலாமே?
விரைவில் ஜெய்லர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்ற தகவலும் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தரப்பில் இருந்து விரைவில் கூட எதிர்பார்க்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…