
Cinema News
ரஜினிக்கு இல்லாத கெட்ட பழக்கமா?.. செமையான போதை கை.. ரகசியம் சொன்ன பிரபலம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கியவர்கள் ரஜினி மற்றும் விஜயகாந்த். ரஜினிகாந்த் தனது தனி திறமையால் 80-தில் காலகட்டத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தார். சமகாலங்களில் விஜயகாந்தும் ரஜினிக்கு இணையான ரசிகர்களை பெற்றார். ரஜினி தொடர்ந்து மாஸ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வழக்கமாக சினிமா துறையில் சாதித்த பின்னர் அரசியலில் அடுத்த அடி எடுத்து வைப்பார்கள்.
அப்படி ரஜினியும் அரசியலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே ஒரு முறை.” நான் அரசியலுக்கு வருவது உறுதி, தமிழக அரசியல் ஒரு வெற்றிடம் இருக்கிறது, அதை நிரப்புவதற்கு நான் வருகிறேன்” என்று தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத போது மேடை போட்டு அறிவிப்பு கொடுத்தார்.

அதன் பிறகு சில மாதங்களிலே அதிலிருந்து பின் வாங்கிக் கொண்டார். இந்த விஷயத்தில் முற்றிலும் மாறுபட்ட விஜயகாந்த் தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும்போது கட்சியை ஆரம்பித்து அவர்களுக்கு எதிராக அரசியல் செய்தார்.
அதற்குக் காரணம் தனிப்பட்ட வாழ்க்கையில் விஜயகாந்த் செய்யாத உதவிகளே கிடையாது. உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கும் உதவுவார். உதவி தேவைப்படுபவர்களுக்கு ஓடி சென்று உதவக்கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். இதனால் இவருக்கு அரசியலின் கதவுகள் திறந்தது. எதிர்காலத்தில் முதலமைச்சர் ஆகி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அப்படி இருக்கையில் இரண்டு பேரும் ஒன்றுக்கொன்று சளைச்சது இல்லை இருந்தாலும் குடி விஷயத்தில் விஜயகாந்த் மாட்டிக்கிட்டார், ரஜினி தப்பித்து விட்டார் என்று பேட்டி ஒன்றில் நடிகர் மற்றும் சினிமா விமர்சகர் பிரபல டாக்டர் காந்தராஜ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது , “பொதுவாக நடிகர்களை பொருத்தவரை வீட்டிற்குள் ஒரு மாதிரியும் வெளியில் வேறு மாதிரியும் வேஷம் போடக் கூடியவர்கள் தான். ஒரு பிரபல நடிகரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவருடைய உடல்நிலை எப்படி என்று எனக்கு தெரியும், அப்படியே படுத்த படுக்கையாக இருப்பார்”.
”சினிமா சார்ந்த பங்க்ஷன் என்று சொன்னால் போதும் உடனே எழுந்து உட்காருவார், விறு விறுவென நடப்பார். இது எல்லாம் வெளியில் நடக்கும். எல்லாம் முடிந்த பிறகு வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே ஒடிஞ்சி படுத்து விடுவார். வெளியில் அப்படித்தான் ஒரு நடிகர் இருப்பார். ரஜினியை பொறுத்தவரை அபூர்வராகங்கள் படங்கள் முதல் கூலி படம் வரை அவரின் உடலில் பெரிதாக மாற்றங்களை கண்டிருக்க முடியாது. கரெக்டா இருப்பாரு. ரஜினிகாந்த் உப்பிட்டாறு, குண்டாயிட்டாரு அல்லது இளைச்சி போயிட்டாரு அப்படிங்கிற செய்தி வந்ததே கிடையாது”.

”அதே மாதிரி அவருடைய இளமை பழக்கவழக்கங்கள் அவ்வளவு ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் கிடையாது. அவர் குடிக்காத சரக்கே கிடையாது.. அடிக்காத சிகரெட்டே கிடையாது.. பல தடவை உயிருக்கு ஆபத்தாகும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொஞ்சம் சீரியஸா தான் இருந்தார். சிங்கப்பூர், அமெரிக்கா என பறந்து பறந்து வைத்தியம் பார்த்தார். தப்பிச்சு வந்துட்டாரு. இதே போல தான் விஜயகாந்த் போனார் அவருக்கு எதுவும் சரியாகல. இப்படி ரஜினிக்கு அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதனால்தான் அந்த குதிரை இத்தனை காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது”. என்று கூறியுள்ளார்.
ரஜினிக்கு குடி,பீடி சிகரெட்னு எல்லா பழக்கமும் இருந்தது. ஆனா இன்னைக்கு அவர் ஒரு சித்தர். தான் செய்த தவறால் தன்னுடைய உடல்நிலை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு மேடையிலும் அதை எடுத்துரைத்து அவரை பின்பற்றும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறார்.