சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஒரு அறிமுகம் தேவையில்லை அந்த அளவுக்கு இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் என்றால் அவர்தான். தற்போதைய நடிகர்கள் ஒரு ஹிட் கொடுத்து அடுத்த படம் ஹிட்டாக வேண்டும் என்று வருடக்கணக்கில் காத்திருந்து கதைகள் தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.
ஆனால், தொடர் சூப்பர் ஹிட் படங்களை ஒரு வருடத்திற்கு உள்ளேயே கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்த் படம் என்றால் அதில் கண்டிப்பாக பாம்புகள் காட்டப்பட்டிருக்கும் தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை, படையப்பா வரை இந்த பாம்பு சென்டிமென்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்பற்றி வந்தார்.
அப்படி அந்தப் பாம்புகள் காட்டப்பட்ட திரைப்படம் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்தது. ரஜினிக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக உள்ளது. அதனால், இந்த பாம்புகளை காண்பதனால் நமக்கு படம் ஹிட்டாகி உள்ளது, என்று தொடர்ந்து அதனை செய்து வந்தார்.
அதாவது, ரஜினிக்கு ஜாதகப்படி ராகு திசை வரும் வருடங்களில் அவருடைய படத்தில் பாம்புகளை காண்பித்தால் அந்த படம் ஹிட்டாகும் என அவர் நம்பி இருந்ததாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் திரைப்படங்களில் பாம்புகள் அதிகமாக காணப்பட்டன என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- இதெல்லாம் நமக்கு தேவைதானா ராஜமௌலி.?! என்ன செய்ய போகிறாரோ?!
ஆனால், உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கதை தேர்வு தனது ரசிகர்களை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்தை காண முழு உழைப்பையும் கொடுத்து அந்த படத்தை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிவிடுவார். அதன் காரணமாகத்தான் திரையில் ரஜினிகாந்தை உச்சாணியில் வைத்து ரசிகர்கள் கொண்டாடினர்.
Karur: தவெக…
TVK Vijay:…
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…