×

சர்வதேச போதை ஒழிப்பு தினம்: ஜிவி பிரகாஷின் சிறப்பான சம்பவம் - வீடியோ!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், நடிப்பு, இசையமைப்பு என இரண்டு துறைகளிலும் பிசியாக உள்ளார். அவருடைய படம் இரண்டு மாதத்திற்கு ஒன்று வெளிவந்து கொண்டிருக்கின்றது. கடைசியாக அவர் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் தற்ப்போது சர்வதேச போதை ஒழிப்பு தினமான இன்று போதை மருந்து பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுகளை வளரும் தலைமுறையினருக்கு எடுத்துரைத்து வருகின்றனர். அந்தவகையில் ஜி.வி பிரகாஷ் போதை பொருட்களுக்கு எதிரான " Say No To Drugs " என்ற விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.

" யாருக்கில்லை சோகம்... யாருக்கில்லை தோல்வி போதை என்பது தீர்வல்ல" என்ற மதன் கார்க்கி வரிகளில் அருமையான உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை ஜி.வி பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார். இதேபோல் போதை பொருள் ஒழிப்பு குறித்து ஏ.ஆர் ரஹ்மானும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளது கூடுதல் தகவல்.

From around the web

Trending Videos

Tamilnadu News