×

மாஸ்டர் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை - லோகேஷ் கனகராஜ் பேட்டி..

 

மாநாடு, கைதி ஆகிய 2 படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது 3வது படமாக விஜயை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியவில்லை.

மாஸ்டர் படத்திற்கு பின் கமல்ஹாசன் அல்லது ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், கோவையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக நடந்த ஒரு விழாவில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது மாஸ்டர் வெளியீடு பற்றி அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் கூறிய அவர் ‘ மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும். தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். கொரொனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் நிறைய பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும் என நம்புகிறேன்’ என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News