×

10 செகண்டுக்கு 15 லட்ச ரூபாய்க்கு மேல்... இது ஐபிஎல் வசூல்!

கடந்தாண்டு கொரோனாவால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் மூலம் மட்டுமே 2,400 கோடியை விளம்பர வருவாயாகப் பெற்றிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.
 

உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தும் டி20 லீக் தொடரான ஐபிஎல்லுக்கு உலக அளவில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. எட்டு அணிகள் பங்குபெறும் இந்தத் தொடரில் விளையாடிவிட மாட்டோமா என உலக அளவில் கிரிக்கெட் வீரர்கள் ஏங்குவதுண்டு. 


அந்த வகையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போன வருடம் கொரோனாவால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. அந்தத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்பட்டது. இது ஒருபுறம் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், போட்டிகளை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் காட்டில் பணமழையைப் பொழிய வைத்தது. 


2020 ஐபிஎல் தொடரில் 10 செகண்ட் விளம்பரத்துக்கு ரூ.7 லட்சம் முதல் 12 லட்ச ரூபாய் வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரக் கட்டணமாக வசூலித்தது. போன ஐபிஎல் மூலம் மட்டுமே 2,400 கோடி ரூபாயை அந்த நிறுவனம் விளம்பர வருவாயாக ஈட்டியிருக்கிறது. அதேநேரத்தில், இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடப்பதால் பார்வையாளர்கள் விகிதம் இன்னும் கூடும் என்று கணக்குப் போட்டு, விளம்பரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளம்பரத்துக்கென 10 செகண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் கட்டணமாக நிர்ணயிக்கப்படலாம் என்கிறார்கள். ஐபிஎல் தொடரின் கோ-ஸ்பான்சர் நிறுவனர் 120 கோடி ரூபாயும், அசோசியேட் ஸ்பான்சர் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு மேலும் கொடுக்கும். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News