×

ஐபிஎல்தான் தோனிக்கு கடைசி சான்ஸ் – முன்னாள் வீரர் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு செப்டம்பர் மாதம் நடக்கும் ஐபிஎல் போட்டிகள்தான் கடைசி வாய்ப்பு என முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு செப்டம்பர் மாதம் நடக்கும் ஐபிஎல் போட்டிகள்தான் கடைசி வாய்ப்பு என முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதோடு சரி, அதன் பின் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் 39 வயதாகும் அவரின் சர்வதேசக் கிரிக்கெட் கனவு முடிந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது.

அதனால் அவரது ரசிகர்கள் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளை பெரிய அளவில் நம்பியுள்ளனர். சி எஸ் கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என நம்பிக்கையாக உள்ளனர். இந்நிலையில் வரணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான டீன் ஜோன்ஸ் ‘சர்வதேச போட்டிகளில் ராகுல் மற்றும் பண்ட்டை இந்தியா முன்னிலைப் படுத்தலாம். ஆனால் தோனி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவரை முன்னிலைப் படுத்துவார்கள்.ஆனால் தோனி சிறப்பாக பங்களிக்கவில்லை என்றால் அவருக்கு இந்திய அணியின் கதவுகள் மூடப்படும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News