Categories: Cinema News latest news

இறைவன் படக்குழுவிற்கு வந்த அதிர்ச்சி நியூஸ்!… என்னங்க ஜெயம் ரவி இப்படி ஆகிப்போச்சே!..

Iraivan: இறைவன் படத்தின் ரிலீஸ் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கும் நிலையில் படக்குழுவிற்கு ஒரு அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது. இதனால் படத்தின் வசூலே பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதன், வாமனன் படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் இறைவன். தனி ஒருவன் படத்திற்கு பின்னர் நயன்தாரா அவருடன் ஜோடி போட்டு இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘ஜெய்லர்’ வெற்றி நெல்சனை தூக்கி விடும்னு பார்த்தா துரத்தி விட்டுருச்சு! அப்போ அவ்ளோதானா?

இதை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜன கண மன படத்திற்குப் பிறகு ரவியுடன் இணைவதாக அறிவித்த அஹமத் கோவிட்-19 தொற்றால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் தொடங்கப்படவில்லை. 

இப்படத்தில் நயன் 20 நாள் கால்ஷீட்டுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்று இருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. ஏகப்பட்ட வன்முறை காட்சிகளுடன் தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுப் போற அளவுக்கு பொறும இல்ல என வசனங்கள் இடம் பெற்று இருந்தது.

இதையும் படிங்க: ‘ரஜினி171’க்கு பக்கா ப்ளான் போட்ட லோகேஷ்! ஒருத்தன் உள்ள வர முடியாது – இவங்க இருக்கும் போது என்ன பயம்?

இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் க்ளீன் ஏ சர்டிபிகேட்டை கொடுத்து இருக்கிறது. படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள், நிறைய கெட்ட வார்த்தைகள் இருப்பதாகவும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இறைவன் படம் வரும் 28ந் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில், படத்தின் வசூல் பெரும்பளவில் பாதிக்கப்படும் என படக்குழு கவலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily